பாகிஸ்தானில் 40 வயது இஸ்லாமியருக்கு கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட 14 வயது இந்து சிறுமி

சுதி என்ற 14 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு 40 வயது இஸ்லாமியர் முகம்மது‌ ஆசார் தரேஜோ என்பவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது. பாகிஸ்தானிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர்‌ இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் முகம்மது அந்த சிறுமியுடன் நிக்காஹ் நாமா எனப்படும் இஸ்லாமிய திருமண சான்றிதழுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக ஊடகங்களில் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன் இது குறித்து விசாரணை செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டனர்.

சிந்து மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1000 இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிறுமிகள் கடத்தப்பட்டு, மதமாற்றப்பட்டு வலுக்கட்டாயமாக அவர்களை‌ கடத்தியவர்களுக்கே திருமணம் செய்து வைக்கப்படுவதாக மனித‌ உரிமை அமைப்புகளின் மதிப்பீடு கூறுகின்றது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மேஹக்‌ குமாரி என்ற 14 வயது இந்து சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் ஏற்கனவே இரு முறை திருமணமான 4 குழந்தைகளுக்கு தந்தையான‌ இஸ்லாமிய தொழிலாளியால் கடத்தப்பட்டு மதமாற்றப்பட்டு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்நிகழ்வுக்கு சில மாதங்களுக்கு முன் ஹுமா யூனுஸ் என்ற 14 வயது கிறிஸ்தவ சிறுமியும் இதேபோல் கராச்சியைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். பின்னர் வழக்குத் தொடரப்பட்ட போது அதிர்ச்சியூட்டும் விதமாக சிறுமி வயதுக்கு வந்துவிட்டதால் இந்த திருமணம் செல்லும் என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.

மற்றொரு சம்பவத்தில் சிந்து மாகாணத்தின் ஹலா என்ற பகுதியைச் சேர்ந்த பாரதி பாய் என்ற இந்துப் பெண் அவரது திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஆயுதங்களுடன் நுழைந்த அடியாட்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை உதவியுடன் கடத்திச் செல்லப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஷாருக் குல் என்ற இஸ்லாமியருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்த மனித உரிமை மீறலைக் கண்டிக்கும் விதமாக இந்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து எச்சரித்தது.

இத்தகைய கொடுமைகளுக்கு ஏழை இந்துக்கள் மட்டும் ஆளாவதில்லை. பாகிஸ்தானிய இஸ்லாமியர்களின் குறி நடுத்தர வர்க்க இந்துக்களையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா நோய் பாதிப்பு பரவி வரும் இந்த அசாதாரணமான சூழலிலும் கராச்சியிலுள்ள ஒரு நடுத்தர வர்க்க இந்து குடும்பம் இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு கட்டாயப்படுத்தப்பட்டது.

2016ல் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான மசோதா ஒன்று விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இஸ்லாமிய மத குருக்கள் மற்றும் அடிப்படைவாதிகளின் எதிர்ப்பால்  இன்று வரை சிந்து மாகாண சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

பாகிஸ்தான் மாகாணங்களில் சிந்து மாகாணத்தில் மட்டுமே குழந்தைத் திருமணத்துக்கு எதிரான சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2014ல் ஆண்‌ பெண் திருமண வயதை 18ஆக உயர்த்த வகை செய்யும் சிந்து குழந்தை திருமண கட்டுப்பாடு சட்டம் சிந்து மாகாண சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருமணம் செய்விப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும் இச்சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறியதாகவே உள்ளது.

இவ்வாறு பாகிஸ்தானில் உள்ள இந்துக்களும் பிற சிறுபான்மையினரும் மனிதாபிமானமற்ற முறையில் ஒவ்வொரு நாளும் துன்புறுத்தப்படும் வேளையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையின அகதிகளுக்கு பாரதிய குடியுரிமையை துரிதமாக வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), இடது சாரிகளாலும், தேசிய அளவிலான ‌ஆங்கில ஊடகங்களாலும் எதிர்க்கப்பட்டு‌ இஸ்லாமியர்களை வன்முறையில் ஈடுபடச் செய்தது வேதனைக்குரிய விஷயம்.

(மேலே உள்ளவை அசல் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்)

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? நாங்கள் ஒரு இலாப நோக்கற்றவர். நன்கொடை அளித்து, எங்கள் பத்திரிகைக்கு பணம் செலுத்த உதவுங்கள்.
இந்து போஸ்ட் இப்போது டெலிகிராமில் உள்ளது. இந்து சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த சிறந்த அறிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு, தந்தி மீது இந்து போஸ்டுக்கு குழுசேரவும்.